தாயாரின் 100வது பிறந்தநாள்: ஆசி பெற்றார் மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஆமதாபாத்: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபா இன்று (ஜூன்18) 100வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நாளை முன்னிட்டு குஜராத் காந்திநகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற பிரதமர் மோடி தாயை வணங்கி ஆசி பெற்றார்.

latest tamil news

இன்று காலை குஜராத் சென்ற பிரதமர் தனது தாயாரின் பாதங்களை கழுவி வணங்கினார். பின்னர் அம்மாவிடம் சில நிமிடங்கள் பாசமாக நலம் விசாரித்தார்.

100வது வயதில் தாய் ஹீராபென்
பாதம் கழுவி ஆசி பெற்றார் மோடி!

………

தனது தாயாரின் பிறந்த நாள் குறித்து மோடி கூறியிருப்பதாவது: ” மா ., இது வெறும் வார்த்தை அல்ல உணர்வுகள் கலந்தது. 100 ஆண்டை தொடும் எனது தாயாரின் பிறந்த நாளில் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். எனது எண்ணங்களையும் நன்றியையும் வெளிப்படுத்தினேன் “. இவ்வாறு கூறியுள்ளார்.

latest tamil news

ஹீராபா பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் உள்ள முக்கிய கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.