ஆனியன் ரிங்ஸ் ஆர்டர் போட்டது குத்தமா? – டெல்லி இளைஞரை அசர வைத்த ரெஸ்டாரன்ட்!

ஆன்லைன் ஆர்டர் செய்யும் உணவுகள் டெலிவரி ஆவதில் பல குளறுபடிகள் நடப்பது வழக்கம். அதிலும் ஆர்டர் செய்த உணவுக்கு பதில் மாறி வருவதும் நடப்பவைதான். ஆனால் கேட்ட டிஷ்ஷை அப்படியே ஒரு உணவகம் மாற்றி பேக் செய்து அது வாடிக்கையாளருக்கு டெலிவரியும் செய்யப்பட்டிருக்கிறது.
அப்படி என்ன டிஷ் என யோசிக்கிறீர்களா? டெல்லியை சேர்ந்த ubaidu என்ற நபர் ஒருவர் ஆன்லைன் ஃபுட் டெலிவரி ஆப் மூலம் ஆனியன் ரிங்ஸ் ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் அவருக்கு வந்ததோ வெறும் ஆனியன். அதாவது வெட்டப்பட்ட வெங்காயத்தை அழகாக பேக் செய்து அனுப்பப்பட்டிருக்கிறது.

View this post on Instagram

A post shared by UbaidU (@ubaidu_15)

இதனை பெற்ற அந்த ubaidu முதலில் அதிர்ச்சியுற்று பின்னர் அதனை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக பதிவிட்டு வைராலாக்கியிருக்கிறார். அதில், “ஆனியன் ரிங்ஸ் ஆர்டர் செய்த எனக்கு இதுதான் கிடைத்தது” என அந்த ரீல்ஸின் குறிப்பிட்டு, பாக்ஸில் இருந்த வெங்காயத் துண்டுகளை பிரித்து விரல்களில் ரிங்ஸாக போட்டுக்கொண்டு போஸும் கொடுத்திருக்கிறார்.
இதுபோக, தனது ரீல்ஸுக்கு, ‘ஆனியனால் அழுகை வரும் என்பது வெறும் பேச்சு இல்லை நண்பர்களே’ கேப்ஷனும் இட்டுள்ளார். இந்த ரீல்ஸை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்திருக்கிறார்கள். படு வைரலான இந்த வீடியோவின் கமெண்ட் செக்‌ஷனில் நெட்டிசன்கள் ஜாலி கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள். 
Also Read: 
ஒரு மாசம் முன்னாடிதான் கல்யாணம்.. ஆனால் 4 மாசம் கர்ப்பம்: அதிர்ந்துப்போன கணவர்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.