கடந்த சில ஆண்டுகளாக இந்தியா டிஜிட்டல் மயமாக மாறி வருகிறது என்பதும் குறிப்பாக பண பரிவர்த்தனையில் UPI மிகப்பெரிய பங்கை வகித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
ஒவ்வொரு மாதமும் UPI மூலம் பண பரிவர்த்தனை செய்யும் தொகை நம்பவே முடியாத அளவுக்கு அதிகரித்து வருவது UPI வெற்றியை உறுதி செய்து வருகிறது.
ஜூலை மாதத்தில் 3 ஜாக்பாட்.. யாருக்கெல்லாம் லாபம்..!
இந்தியாவில் மட்டுமின்றி மேலும் சில நாடுகளில் குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளில் UPI செயல்பட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டில் UPI
அந்த வகையில் தற்போது பிரான்ஸ் நாட்டிலும் UPI பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் UPI செயலி மற்றும் ரூபே டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளை இனி பிரான்ஸ் நாட்டிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப தொழில்நுட்பத் துறை அமைச்ச அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் – சிங்கப்பூர்
ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளில் UPI செயலி, மற்றும் ரூபே கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த சேவை பிரான்ஸ் நாட்டில் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தம்
நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இன்டர்நேஷனல்(NPCII) மற்றும் தி இன்டர்நேஷனல் ஆர்ம் ஆஃப் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து பிரான்ஸ் நாட்டின் லைரா (LYRA) நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் காரணமாக இனி பிரான்ஸ் நாட்டில் UPI செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூபே கார்டு
பிரான்ஸ் நாட்டில் UPI செயலி செயல்பாட்டுக்கு வரும் நிலையில் ரூபே கார்டும் பிரான்ஸ் நாட்டில் ஏற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் பிரான்ஸ் நாட்டில் ரூபே கார்டுகளில் இனி வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணி பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
இது குறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியபோது, ‘பிரான்ஸ் நாட்டின் லைரா என்ற நிறுவனத்துடன் பேசி ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் இதன் மூலம் இன்னும் ஒரு சில நாட்களில் பிரான்ஸ் நாட்டில் UPI மற்றும் ரூபே கார்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பணப்பரிவர்த்தனை அதிகரிக்கும்
இதன் மூலம் பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்தியர்கள் மற்றும் பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள் UPI மூலம் பண பரிமாற்றம் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். UPI மூலம் தற்போது ஒரு மாதத்தில் 550 கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடந்து வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டுடன் செய்த ஒப்பந்தம் காரணமாக மேலும் இந்த பணப்பரிவர்த்தனை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-ஐரோப்பா
மேலும் UPI அமெரிக்கா, பிற ஐரோப்பிய நாடுகள் மற்றும் மேற்கு ஆசியாவில் விரிவுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் உள்ளது என்றும், பிரான்ஸ் நாட்டில் UPI சேவை மற்றும் ரூபே கார்டுகள் கிடைப்பதால், இந்திய சுற்றுலாப் பயணிகள் அந்த நாட்டிற்குச் செல்லும் போது தடையின்றி பணம் செலுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய தூதர்
பிரான்சில் UPI மற்றும் ரூபே செயல்பாட்டுக்கு வருவது குறித்து, பிரான்ஸ் நாட்டின் இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரஃப் அவர்கள் கூறியபோது, ‘நாங்கள் பிரான்ஸ் நாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம், இன்டர்நேஷனல் மற்றும் லைக்ரா நெட்வொர்க்கில் கையெழுத்திடுவதன் மூலம் செயல்முறையை தொடங்கியுள்ளோம் என்றும் கூறிய அவர், சிங்கப்பூரின் தூதராக இருந்தபோது, பீம் க்யூஆர் மற்றும் ரூபே கார்டுகளை அங்கும் அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
UPI used in France after UAE and Singapore says central minister
UPI used in France after UAE and Singapore says central minister | பிரான்ஸ் நாட்டிலும் நுழைந்த இந்தியாவின் UPI: மத்திய அமைச்சர் தகவல்