பந்தலுார்: பந்தலுார் எருமாடு பகுதியில் நடந்த வாகன சோதனையில், ‘ஏர் ரைபிள்’ வைத்திருந்த கேரளாவை சேர்ந்த நால்வர், திருப்பி அனுப்பப்பட்டனர்.நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே எருமாடு போலீஸ் ஸ்டேஷன் அருகே, நேற்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கேரளா கோழிக்கோடு பகுதியில் இருந்து, காரில் வந்த நால்வரிடம் நடத்திய சோதனையில், ‘ஏர் ரைபிள்’ இருந்தது தெரியவந்தது.தேவாலா டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையிலான போலீசாரின் விசாரணையில், ‘கேரளா மாநிலம் வைத்திரி பகுதியில், சுற்றுலா விடுதி வைத்திருக்கும் ஆசீர், 38 துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு, ‘ஆன்லைனில்’ விற்பனை செய்யப்படும் ‘ஏர் ரைபிள்’ஐ, 32 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
அதை கடந்த வாரம், கோழிக்கோடு பகுதிக்கு எடுத்து சென்றபோது, நண்பர்கள் நால்வரிடம் கொடுத்துள்ளார். மீண்டும் அவரிடம் வழங்க, கோழிக்கோடில் இருந்து தமிழக எல்லையான சுல்தான் பத்தேரி, எருமாடு வழியாக, இவர்கள் வைத்திரி செல்லயிருந்தது தெரிந்தது. இவர்களுக்கு அறிவுரை வழங்கிய போலீசார், கேரள மாநிலத்துக்கு திருப்பி அனுப்பினர்.
Advertisement