தனுஷின் ‘வாத்தி’ படத்தில் செம சம்பவம் காத்திருக்கு.. ஜி.வி. பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

நடிகர் தனுஷ் நடித்து வரும் ‘வாத்தி’ படத்தில் வெயிட்டான டான்ஸ் ஒன்று இருப்பதாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில், கடைசியாக தனுஷ் நடிப்பில் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான ‘மாறன்’ படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் நடித்து வந்தார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ், இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு உதகையில் நடந்துவந்தநிலையில், சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து தமிழில் ‘வாத்தி’ என்றும், தெலுங்கில் ‘சார்’ என்றும் பெயரிடப்பட்டுள்ள படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார்.

image

சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் ஆசிரியராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. கல்வியை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவராகவும், மாஃபியா கும்பலை எதிர்த்து போராடுபவராகவும் நடிகர் தனுஷ் நடித்து வருவதாக தெரிகிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தனுஷ், இயக்குநர் வெங்கி அட்லூரி ஆகியோருடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து, இந்தப் படத்தில் வெயிட்டான பாடல் ஒன்று இருப்பதாக ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘மயக்கம் என்ன’, ‘அசுரன்’, ‘மாறன்’ ஆகிய படங்களில் கூட்டணி அமைத்து ஹிட் பாடல்களை கொடுத்த தனுஷ் மற்றும் ஜி.வி. பிரகாஷ் கூட்டணி, 6-வது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் பாடல் அமையும் என எதிர்பார்க்கலாம். மேலும், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் படம் ‘தி கிரே மேன்’ ஜூலை மாதம் 22-ம் தேதியும், ‘திருச்சிற்றம்பலம்’ ஆகஸ்ட் 18-ம் தேதியும் வெளியான உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.