தாடி வைத்தால் திருமணத்துக்கு தடை.. ராஜஸ்தான் பஞ்சாயத்து முடிவால் பரபரப்பு! ஏன் தெரியுமா?

இளைஞர்கள் தாடியை க்ளீன் ஷேவ் செய்தால் மட்டுமே திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்க முடியும் என ராஜஸ்தானில் உள்ள கிராம பஞ்சாயத்து முடிவெடுத்துள்ளது.
பாலி மாவட்டத்தில் உள்ள குமாவத் சமூகத்தைச் சேர்ந்த 19 கிராம பஞ்சாயத்துகளில்தான் இந்த உறுதிமொழி எடுக்கப்பட்டிருக்கிறது. ஃபேஷன் என்ற பேரில் தாடி வளர்த்துக்கொள்ளலாம்தான். ஆனால் திருமண நிகழ்வின் போது எந்த மணமகனும் தாடி வைத்திருக்க கூடாது. தாடியை க்ளீன் ஷேவ் செய்திருந்தால் மட்டுமே திருமணத்துக்கு அனுமதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
image
இதுபோக, திருமணத்தின் போது DJ டான்ஸ், டெகொரேஷன்ஸ், ஆடம்பர உடைகள் வாங்குவது போன்றவற்றுக்கும் குமாவத் சமூகத்தினருக்கு அந்த கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ளதாம்.
ஏனெனில் இது போன்ற தடையால் திருமண நிகழ்வுக்கு ஆகும் செலவினங்கள் குறைக்கப்படும் என பஞ்சாயத்து தரப்பு தெரிவித்துள்ளது. இதனை மீறினால் அபாரத்துடன் உரிய நடவடிக்கையும் எடுக்கப்படுமாம்.
ALSO READ: 
ஒரு மாசம் முன்னாடிதான் கல்யாணம்.. ஆனால் 4 மாசம் கர்ப்பம்: அதிர்ந்துப்போன கணவர்!
இது உத்தரவுகளெல்லாம் பாலியில் உள்ள கிராமத்தினர் மட்டுமல்லாது மொத்த ராஜஸ்தானியர்களும் பின்பற்றும்படி அந்த கிராம பஞ்சாயத்து நிர்வாகம் கூறியுள்ளது.
மேலும் குமாவத் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 20,000 பேர் ராஜஸ்தானை விட்டு குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெவ்வேறு மாநிலங்களில் குடிபெயர்ந்தாலும் அவர்கள் திருமணத்தின் போது பஞ்சாயத்தின் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: 
ஆனியன் ரிங்ஸ் ஆர்டர் போட்டது குத்தமா? – டெல்லி இளைஞரை அசர வைத்த ரெஸ்டாரன்ட்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.