ரஷ்ய வீர்களுக்கு உக்ரைன் விவசாயிகள் பரிசு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கீவ்: ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்கள் வயலில் விளைந்த செர்ரிப் பழங்களை விவசாயிகள் விஷமாக்கினர். அதனை சாப்பிட்ட ரஷ்ய வீரர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தங்களது பரிசு என விவசாயிகள் கூறுகின்றனர்.

உக்ரைன் மீது கடந்த 3 மாதங்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இருப்பினும் இதனை கண்டு கொள்ளாத ரஷ்யா சமீபத்தில் டான்பாஸ் நகரை கைப்பற்றியுள்ளது.

latest tamil news

இந்நிலையில், உக்ரைனில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் செர்ரி பழங்கள் உற்பத்தி செய்யப்படும் மெலிடோபோல் நகரை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. இதனால், கோபமடைந்த விவசாயிகள், செர்ரி பழங்களை விஷமாக்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், அதனை அபகரித்து சென்று சாப்பிட்ட ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் நகர மேயர் ஒன்று தெரிவித்துள்ளார். இது ரஷ்யாவிற்கு நாங்கள் அளித்த பரிசு என உக்ரைன் விவசாயிகள் கூறியுள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.