சமைப்பதில் இருந்து உணவு பரிமாறுவது வரை, வாழை இலைகள் பல ஆண்டுகளாக தென்னிந்திய சமையலறைகளில் ஓர் அங்கமாக இருந்து வருகின்றன. வாழை இலைகள்’ உணவைப் பரிமாறும் போது அழகாகத் தெரிவது மட்டுமின்றி, அவை மக்கும் தன்மையுடையது, பின்னர் அவை உரம் தயாரிக்கப் பயன்படும். வாழை இலையில் சமைப்பதால் கிடைக்கும் நன்மைகளை தொடர்ந்து படியுங்கள்!
வாழை இலையில் சமைப்பது
வாழை இலைகள் பெரும்பாலும் வேகவைத்த உணவுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன, இது பூஜ்ஜிய எண்ணெய் சமையலை சாத்தியமாக்குகிறது. வாழை இலைகளில், உடல் செல்களின் அழிவைத் தடுக்கக்கூடியதும், நோய்கள் வராமல் பாதுகாக்கக்கூடியதுமான சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடண்டான பாலி ஃபீனால்கள் பொதிந்திருக்கின்றன.
வாழை இலையில் உணவை வேகவைக்கும்போது, இது பல வாழ்க்கை முறை நோய்களைத் தடுக்கும் பாலிபினால்களை உறிஞ்சுகிறது.
உடலில் பித்தத்தின் அளவை குறைக்கவும், உயர் ரத்தஅழுத்தம், தலைவலி, வயிற்றுப் புண், தோல் நோய்களின் தீவிரம் குறையவும் வாழை இலையில் உணவருந்தலாம். வாழை இலையில் சாப்பிடுவதால், பித்தம் சார்ந்த நோய்கள் அனைத்தும் சாந்தப்படும். உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு உடல் தூய்மையடையும்.
தென்னிந்தியாவில் உணவு பரிமாற வாழை இலைகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை சிக்கனமானவை மட்டுமல்ல, கூடுதல் பாத்திரங்களைக் கழுவுவதிலிருந்து ஒருவரைக் காப்பாற்றுகின்றன.
வாழை இலை உணவுக்கு ஒரு வாசனையை அளிக்கிறது, சுவையை மேம்படுத்துகிறது. சூடான உணவை இலையில் போட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது, பசுமையான குளோரோஃபில் உணவுடன் கலந்து, உடலுக்கு ஊட்டத்தைத் தருகிறது.
சம்மணமிட்டு வாழை இலையில் உணவருந்தும்போது, வயிற்றுப் பகுதிக்கும் நல்ல பயிற்சி கிடைக்கிறது. சிறுவயதிலேயே வாழை இலையில் சாப்பிடும் பழக்கத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தால் செரிமானம் சார்ந்த நோய்களைத் தடுக்கலாம், பசி உணர்வும் அதிகரிக்கும்.
வாழை இலைகளை எப்படி சேமிப்பது?
உங்களிடம் புதிய வாழை இலைகள் இருந்தால், அவற்றைச் சேமித்து வைக்க விரும்பினால், அதற்கான எளிய வழி இங்கே உள்ளது. வாழை இலைகளை சுத்தம் செய்து, உலர்த்தி, காற்று புகாத பிளாஸ்டிக் பையில் சேமித்து வைக்கவும்.
இப்போது பையை பிரிசரில் வைக்கவும், நீங்கள் அதை சில மாதங்களுக்கு ஒன்றாக சேமிக்கலாம். இலைகளை அவற்றின் வழக்கமான வடிவம் மற்றும் அமைப்புக்கு கொண்டு வருவதற்கு அவற்றைப் பயன்படுத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அவற்றை பிரிசரில் இருந்து வெளியே எடுத்து வைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“