அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு குடும்ப அட்டை முறை

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் ,அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் , குடும்ப அட்டை முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் வர்ணங்களில் இவ்வட்டை அறிமுகப்படுத்தப்பட்டு இதன் மூலமாக அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அதிபர் க.கருணாகரன் தலைமையில் நேற்று (17) இடம் பெற்ற கூட்டத்தின் போது மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலங்களிலும் இந்த முறையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கின்ற அத்தியாவசிய பொருட்கள் சகலருக்கும் கிடைக்கும் வகையில், பங்கிடுசெய்வதற்கு வசதியாகவு ஒரு குடுப்பத்தில் யாராவது ஒருவர்மட்டும் அட்டையினை பயன்படுத்தவும் எரிவாயு ஒருமாதத்திற்கு ஒன்று என்ற வகையிலும் எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலும் மண்ணெண்ணெய் குறித்த அளவிலும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பிரதேச செயலகத்தின்  தங்களுக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரம் தங்களின் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் எனவும் இந்த நடைமுறை எதிர்வரும் வாரங்களில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

மக்கள் எரிபொருள் தீர்ந்து விடும் என்ற அச்சத்தில் இரவுவேளைகளில் தங்களின் வாகனங்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிறுத்திவிட்டு அதிகாலையில் வந்து மணித்தியாலங்களாக காத்திருக்க இனி தேவை இருக்காது. எரிபொருட்களை அளவுக்கு அதிகமாக வீடுகளில் பதிக்கிவைப்பதன் மூலம்தான் இத்தகை தட்டுப்பாட்டிற்கு காரணமாகும். தயவு செய்து மக்கள் தேவைக்கு மாத்திரம் பெற்றுகொண்டு மற்றவர்களும் பெற்றுக்கொள்ளவாய்ப்பு அளிக்குமாறு பொதுமக்களை அரசாங்க அதிபர்கேட்டுகொன்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.