சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படவுள்ள கடன் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே குறித்த குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை காத்திருக்க வேண்டும்
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொடர்பில் ஹர்ஷ வெளியிட்ட முக்கிய தகவல் |
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெற இலங்கை இந்த வருட இறுதி வரை காத்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்கு நிதி நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன் கடன் மறுசீரமைப்பும் தேவைப்படும் எனவும் இது எளிதான விடயம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
எங்களுக்குப் பின் வந்த பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகள் உலகத்துடன் இணைந்து ஏற்றுமதி செய்து முன்னேறிய போது நாம் என்ன செய்தோம் எனவும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.