அதிக ரன்கள், பவுண்டரிகள்…. பல சாதனைகளை ஒரே போட்டியில் படைத்த இங்கிலாந்து அணி

அம்ஸ்டல்வீன்,

இங்கிலாந்து அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீசியது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 498 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 499 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் இங்கிலாந்து அணி பல சாதனைகளை படைத்துள்ளது.

நெதர்லாந்து அணிக்கு எதிராக 498 ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த அணியின் பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடத்தில் உள்ளது. ஒருநாள் போட்டிகளில், முதல் மூன்று அதிகபட்ச ரன்களை குவித்த அணியாக இங்கிலாந்து திகழ்ந்து வருகிறது. அதிக ரன்கள் குவித்த அணிகள் பட்டியல் ஒரு போட்டியில் 3 வீரர்கள் சதம் அடிப்பது இது 3-வது முறை ஆகும்.

ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை மட்டுமே ஒரு இன்னிங்ஸில் மூன்று சதங்கள் அடிக்கப்பட்டன. இருமுறையும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்தான் அடித்தார்கள். 2015-ல் ஜோகன்னஸ்பர்க்கில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகவும், அதே ஆண்டு வான்கடே மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராகவும் மூன்று சதங்கள் அடித்திருந்தன. இந்நிலையில் ஒரு இன்னிங்சில் 3 சதங்கள் அடிக்கப்பட்ட அணியின் பட்டியலில் இங்கிலாந்து அணி 2-வது இடத்தை பிடித்தது.

அதிக முறை 400- ரன்களுக்கு மேல் குவிந்த அணியின் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (6 முறை) அணி முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் (5 முறை) உள்ளது. இங்கிலாந்து இன்னிங்சின் முதல் 35 ஓவர்களில், 9 சிக்ஸர்கள் மற்றும் 22 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டன. 36-50 ஓவர்களில், இங்கிலாந்து 17 சிக்ஸர்களை அடித்தது. இதில் பட்லர் (10) லிவிங்ஸ்டன் (1) மலான் (1) சிக்சர்களும் அடித்தனர். ஒட்டுமொத்தமாக 26 சிக்சர்களை இங்கிலாந்து அணி அடித்தது. இது ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் ஒரு அணியின் அதிகபட்ச சிக்சராகும்.

இந்த பட்டியலிலும் முதல் மூன்று இடங்களை இங்கிலாந்து ஆக்கிரமித்துள்ளது.ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த அணி பட்டியல் மொத்தமாக இங்கிலாந்து பவுண்டரிகள் (36 பவுண்டரிகள், 26 சிக்ஸர்கள்) மூலம் 300 ரன்களைக் குவித்தது. இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் பவுண்டரிகளில் மட்டும் 300+ ரன்களை எடுத்த முதல் அணி என்ற பெருமையையும் இங்கிலாந்து அணி தட்டிச்சென்றது.

இந்த போட்டியில் பட்லர் தனது சதத்தை வெறும் 47 பந்துகளில் எட்டினார். இது ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து வீரர் அடித்த இரண்டாவது அதிவேக சதமாகும். இங்கிலாந்தின் இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் பட்லர்தான் இருக்கிறார். அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் 50 அல்லது அதற்கும் குறைவான பந்துகளில் மூன்று முறை சதம் அடித்த ஒரே வீரர் அவர்தான்.

பட்லர் பட்லர் 65 பந்துகளில் 150 ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த ஏபி டி வில்லியர்ஸ் இருக்கிறார். 2015 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை அவர் (64 பந்துகளில்) படைத்தார்.

46-வது ஓவரில் லிவிங்ஸ்டன் 32 ரன்கள் குவித்தார். அந்த ஓவரில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடிக்கப்பட்டது. ஒரு நாள் போட்டியில் ஒரே ஓவரில் இங்கிலாந்து எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். முன்னதாக 2007-ம் ஆண்டு தி ஓவல் மைதானத்தில் யுவராஜ் சிங்குக்கு எதிராக டிமிட்ரி மஸ்கரென்ஹாஸ் கடைசி ஓவரில் ஐந்து சிக்சர்களை விளாசியதே அதிகபட்சமாக இருந்தது. நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 498 ரன்கள் விளாசியதன் மூலம் பல சாதனைகளை படைத்திருக்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.