தடுமாறி கீழே விழுந்த ஜோ பைடன்..! : வைரலானது வீடியோ| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: தனது சொந்த மாகாணத்தில் சைக்கிள் ரெய்டு சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

அமெரிக்க அதிபர் ஜோபைன், டெல்வோயர் மாகாணத்தில் உள்ள தனது கடற்கரை இல்லத்திற்கு வந்திருந்தார். அப்பகுதி வளாகத்தில் “சைக்கிளிங்” சென்றார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த மக்களை பார்த்ததும் பேசுவதற்காக சைக்கிளை நிறுத்தினார். அப்போது, நிலை தடுமாறி ஜோ பைடன் கீழே விழுந்தார். எனினும் சட்டென எழுந்தார். எனினும், தான் நலமாக இருப்பதாக கூறினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

latest tamil news

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஜோ பைடனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. எந்த வித மருத்துவ சிகிச்சை தர தேவையில்லை” என்று தெரிவிக்கப் பட்டு உள்ளது. ஜோபைடன் கீழே விழுந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.