பிரதமர் மோடி சென்னை வரும்போதெல்லாம் என்னிடம் இதை கேட்பார் – மனம்திறந்த முதல்வர் ஸ்டாலின்.!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னின் 100ஆவது பிறந்த நாளுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“அன்புள்ள நரேந்திர மோடியே, தங்கள் தாயார் இன்று தமது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் என்று அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தாய் மீதான தங்கள் பாசத்தை நான் நன்கறிவேன். ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் எனது தாயாரின் உடல்நலன் குறித்து தாங்கள் விசாரிப்பதை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.

இந்தச் சிறப்பான நாளில், தங்கள் தாயாருக்கும் தங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.