பள்ளி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் 15 வயதான பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த வாரம் திடீரென வீட்டிலிருந்து காணாமல் போய்வுள்ளார். எனவே மாணவியின் பெற்றோர் வடமதுரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதில் வேடசந்தூர் அருகே உள்ள பூசாரி கவுண்டனூர் பகுதியை சேர்ந்த வீரமணிகண்டன் என்ற வாலிபர் திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரிய வந்தது.
அது மட்டுமல்லாது தனது உறவினர் வீட்டில் மாணவியை வீரமணிகண்டன் மறைத்து வைத்திருந்தார் என்பதும் விசாரணையின் போது தெரிய வந்தது. இவருக்கு வேல் முருகன், குமாரவேல் ஆகிய இருவர் உதவி செய்துள்ளனர்.
இதனையடுத்து வீரமணிகண்டன் உட்பட 3 பேர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.