ரகசிய வாக்குறுதி?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: பா.ம.க., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி, தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களைச் சந்தித்து ஆசி பெற்றார். இவர் டில்லி வந்து பிரதமர் மோடியையும் சந்தித்தார்.

latest tamil news

அன்புமணியை டில்லிக்கு வரச் சொன்னது பிரதமர் அலுவலகம்தான் என சொல்லப்படுகிறது. அன்புமணியை மோடி சந்திக்க விரும்பியதால் இந்த அழைப்பு என்கின்றனர்.பா.ம.க., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த மோடி, தமிழக அரசியல் நிலை குறித்தும் அன்புமணியோடு பேசியுள்ளார்.

அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., வேட்பாளரை பா.ம.க., ஆதரித்து ஓட்டளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாராம் பிரதமர்.இதைத் தவிர வேறு சில விஷயங்களும் பேசியதாக சொல்லப்படுகிறது.

latest tamil news

2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., தொடர வேண்டும் என கூறியதுடன், சில வாக்குறுதிகளையும் அன்புமணிக்கு பிரதமர் அளித்துள்ளார். என்ன வாக்குறுதி என்பது பரம ரகசியமாக உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.