திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகே அதிவேகமாக வந்த பைக், எதிரே வந்த வேன் மீதி மோதியதில் இளைஞர் தூக்கிவீசப்பட்ட விபத்தின் சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது.
நேற்று பிற்பகல், பழனி பாளையம் தெருவை சேர்ந்த மனோஜ் என்ற இளைஞர், பைக்கில் சென்றுக்கொண்டிருந்த போது, ஆட்டோவை முந்தி செல்ல சாலையின் சென்டர் லேனை கடந்து வலதுபுறம் ஏறி வந்தபோது, எதிரே வந்த வேன் மோதியது.
இதில், தூக்கிவீசப்பட்ட இளைஞர் மனோஜ் படுகாயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் மற்றோரு வாகன ஓட்டியும் காயமடைந்தார்.