உலகளவில் அதிகமான மக்களால் ரசிக்கப்படும் ஒரு அற்புதமான பானம் என்றால் அது டீ தான். பலர் எந்த நேரத்தில் டீ கொடுத்தாலும் குடிப்பார்கள்.
நிறைய பேருக்கு டீ ரிலாக்ஸ் ஆகவும் ரசித்தும் குடிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் சில நபர்கள் டீ கூடவே நொறுக்குத் தீனி சாப்பிடுவது தவிர்க்க முடியாத விஷயமாக வைத்துள்ளனர்.
உண்மையில் இது டீயுடன் ஒரு சில பொருட்களை சேர்த்து சாப்பிடும் போது இது பக்கவிளைவுகளே ஏற்படுத்தும்.
அந்தவகையில் டீ குடிக்கும்போது சேர்த்து சாப்பிடக் கூடாதாத பொருள்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- சூடான பானத்தில் மஞ்சள் சேர்த்து சாப்பிடக் கூடாது மிதமான சூட்டில் மட்டுமே சாப்பிட வேண்டும். மஞ்சளில் உள்ள குர்குமின் போன்ற ரசாயனங்களை சூடான பானத்தில் எடுத்துக் கொள்ளும்போது செரிமான அமைப்புக்கு தீங்கு உண்டாகும் எனவே இதனை தவிர்க்கவும்.
- டீயுடன் சேர்த்து பஜ்ஜி, வடை போன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- தேநீர் அல்லது காபியுடன் கடலை மாவில் செய்யப்பட்ட பலகாரங்களை சாப்பிடும்போது உடல் ஆரோக்கியத்திற்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
- வெறும் வயிற்றில் தேயிலையுடன் சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சையை சேர்த்து எடுத்துக் கொள்வது அவ்வளவு நல்லதல்ல. அது குடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்துவிடும். அதனால் வயிறு உப்பியது போன்ற உணர்வு, வயிறு வீக்கம் ஆகியவை உண்டாகும்.