அதிமுகவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஒற்றைத் தலைமை குறித்து உட்கட்சி விவகாரம் பூதாகரமாக உருவெடுத்த நிலையில், இன்று ஓபிஎஸ் உடன் இபிஎஸ் தரப்பு சமரச முயற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட செயலாளர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். அதிலிருந்து அதிமுகவில் பல்வேறு பிரச்னைகள் உருவாகி உள்ளன.
இந்த நிலையில் பன்னீர்செல்வம் ஒருபுறமும் எடப்பாடி பழனிசாமி மறுபுறமும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ச்சியாக கடந்த 5 நாட்களாக இந்த ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில், இன்று ஆறாவது நாளில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பேச்சுவார்த்தையில் தங்கமணி வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இடம் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காலை 11 மணி அளவில் இந்த பேச்சுவார்த்தை ஓ.பி.எஸ் இல்லத்தில் நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM