10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை ஜூன் 20ம் தேதி நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இந்த தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார்.
தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in, http://dge.tn.gov.in ஆகிய இணையதள பக்கங்களில் அறிந்துக் கொள்ளலாம் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.