மாஸ்கோ:கைது செய்யப்பட்டஉக்ரைன் பெண் டாக்டரை, ரஷ்ய படைகள் மூன்று மாதத்துக்கு பின் விடுவித்தன.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.
உக்ரைனை சேர்ந்த பெண் டாக்டர் டைரா. ரஷ்ய – உக்ரைன் போர் துவங்கியதும், இடுப்பில் கேமராவை வைத்துகொண்டு, போரில் காயம் அடைந்த உக்ரைன் மற்றும் ரஷ்ய வீரர்களுக்கு சிகிச்சையளித்து வந்தார். தன் கேமராவில் பதிவான காட்சிகளை, உக்ரைனின் மரியுபோல் நகரில் இருந்த சர்வதேச பத்திரிகையாளர் குழுவுக்கு அனுப்பினார்.
அந்த வீடியோக்களுடன் பத்திரிகையாளர் ஒருவர் உக்ரைனிலிருந்து தப்பிச் சென்றார். அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட, அவை வேகமாக பரவின. அந்த வீடியோக்களில் உக்ரைன் மக்களிடம் ரஷ்ய ராணுவத்தினர் மனிதநேயமற்ற முறையில் நடந்துக்கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றிருந்ததன.
ஆத்திரம் அடைந்த ரஷ்ய படைகள் மரியுபோலில் இருந்த டாக்டர் டைராவை, கடந்த மார்ச் ௧௫ல் கைதுசெய்தது. அவரை விடுவிக்க உக்ரைன் அரசும், டைராவின் குடும்பத்தினரும், ரஷ்ய படைகளுடன் பேச்சு நடத்தினர். இதையடுத்து மூன்று மாதத்துக்கு பின் டாக்டர் டைராவை, ரஷ்ய படைகள் நேற்று விடுவித்தன.
Advertisement