அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட வாரியான கழக செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் கூட்டமானது, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைமை இன்று காலை விடுத்துள்ள அந்த அறிவிப்பில், “இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக போராடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின், மாவட்ட வாரியான கழக செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் கூட்டம், கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர், சேலம், தருமபுரி, மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கீழ்காணும் விவரப்படி செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற உள்ளன.
இக்கூட்டத்தில் அந்தந்த கழக மாவட்டங்களுக்கு உட்பட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், அமைப்புச்செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.