சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் தோனியின் பிரம்மாண்ட சாதனைகளை தவிடுபொடி ஆக்கியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இதையடுத்து ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.
இதன்மூலம் சர்வதேச டி20 ஆட்டத்தில் தோனியின் இரண்டு சாதனைகளை அவர் முறியடித்துள்ளார்.
சர்வதேச டி20: 6-ம் நிலை மற்றும் கீழ்வரிசை இந்திய வீரர்களில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்
55 – தினேஷ் கார்த்திக் v தெ.ஆ., 2022
52* – தோனி v தெ.ஆ., 2018
50* – மனிஷ் பாண்டே v நியூசி., 2020
சர்வதேச டி20யில் 50+ ரன்கள் எடுத்த மூத்த இந்திய வீரர்கள்
37 வருடங்கள் 16 நாள்கள் – தினேஷ் கார்த்திக் v தெ.ஆ., 2022
36 வருடங்கள் 229 நாள்கள் – தோனி v தெ.ஆ., 2018
35 வருடங்கள் 1 நாள் – ஷிகர் தவன் v அவுஸ்திரேலியா., 2020