கமல்ஹாசனின் ’விக்ரம்’ வசூலில் ஆல் டைம் நம்பர் 1 படமாக சாதனை; பாகுபலி 2 வசூல் முறியடிப்பு

Vikram box office: Kamal Haasan celebrates as Lokesh Kanagaraj film surpasses Baahubali 2’s record in Tamil Nadu: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விக்ரம் திரைப்படம் வெளியானதிலிருந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து வருகிறது. இந்தப் படம் பாகுபலி 2 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை தமிழகத்தில் முறியடித்துள்ளது. 2017ல் வெளியான பாகுபலி 2 படம் தமிழகத்தில் ரூ.146 கோடி வசூலித்தது, விக்ரம் திரைப்படம் ரூ.150 கோடியை தாண்டி இந்தச் சாதனையை முறியடித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் கமல்ஹாசன் தனது நட்சத்திர சக்தியை மீண்டும் நிரூபித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: முழுசா தெரியாம அதை பற்றி பேசக்கூடாது… நடிகை சாய் பல்லவிக்கு விஜயசாந்தி அட்வைஸ்

வெள்ளிக்கிழமை, திரைப்பட வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா ட்வீட் செய்ததாவது, விக்ரம் படம் தமிழகத்தில் எல்லா நேரத்திலும் அதிக வசூல் செய்த படமாக மாறத் தயாராக இருக்கிறது. “#விக்ரம் #விஸ்வாசம் மற்றும் #Baahubali2 TN வசூலை விரைவில் ஆல் டைம் நம்பர் 1 TN வசூலை எட்டும்” என்று பதிவிட்டிருந்தார். வெள்ளியன்று இப்படம் ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும், சனிக்கிழமைக்குள் பாகுபலி 2 படத்தின் வசூலை முறியடிப்பது உறுதி என்றும் அறிக்கைகள் தெரிவித்தன.

தகவல்களின்படி, கமல்ஹாசன் நடித்த இப்படம் உலகளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தற்போது, ​​உலகளவில் ரூ.655 கோடி சம்பாதித்த ரஜினிகாந்தின் 2018 ஆண்டு பிளாக்பஸ்டர் 2.0க்குப் பின்னால், எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த தமிழ்ப் படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் விக்ரம் படம் உள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் படத்தின் விநியோகஸ்தர்கள் ஆகியோருடன் ஒரு நிகழ்வில் ரசிகர்களை சந்தித்து, படத்தை இவ்வளவு அன்புடன் பொழிந்ததற்கு நன்றி கமல்ஹாசன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், விக்ரம் படம் வெற்றி பெறும் என்பதில் எப்போதும் உறுதியாக இருந்ததாக கூறினார். “படம் ரிலீஸுக்கு முன்பே பார்த்த முதல் ஆள் நான்தான். இன்டர்வெல் பிளாக்கிற்குப் பிறகு, தமிழ் சினிமா இப்படியொரு இண்டர்வெல் ப்ளாக்கைப் பார்த்ததில்லை என்பதால் மனதுக்கு இதமாக இருந்தது. படம் நிச்சயம் ஹிட் ஆகும் என்று அப்போதே முடிவு செய்தேன்” என்றார்.

ரெட் ஜெயண்ட் மூவீஸின் கீழ் படத்தை விநியோகித்த உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பேசுகையில், “ஆனால், உண்மையைச் சொல்வதானால், இது இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அடுத்த படத்திற்கு சம்பளம் வாங்குவதற்கு பதிலாக ஒரு ஏரியாவின் விநியோக உரிமையை வாங்க வேண்டும் என்று அனிருத் என்னிடம் கூறினார். வசூலைப் பொறுத்த வரையில் தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸின் ஷேர் மட்டும் ரூ.75 கோடியைத் தாண்டியுள்ளது. எந்த படமும் இப்படி ஒரு சாதனையை படைக்கவில்லை” என்று கூறினார்.

முன்னதாக செய்தியாளர் சந்திப்பின் போது விக்ரமின் வெற்றி குறித்து பேசிய கமல்ஹாசன், “ஒரு நொடியில் 300 கோடி சம்பாதிக்க முடியும்” என்று நான் சொன்னதும் யாருக்கும் புரியவில்லை. நான் என் மார்பில் அடித்துக் கொள்வதாக அவர்கள் நினைத்தார்கள். நான் சொன்னது வருவதை இப்போது பார்க்கலாம் (விக்ரம் பாக்ஸ் ஆபிஸ் வசூல்). என் கடன்களை எல்லாம் அடைப்பேன், என் மனதுக்கு இணங்கச் சாப்பிடுவேன், என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னால் முடிந்ததைக் கொடுப்பேன். அதன் பிறகு என்னிடம் எதுவும் மீதி இல்லை என்றால், இனி கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை என்று சொல்வேன். பிறருடைய பணத்தைப் பெற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்வதாக நான் நடிக்க வேண்டியதில்லை. எனக்கு பெரிய தலைப்புகள் எதுவும் வேண்டாம். நான் ஒரு நல்ல மனிதனாக இருக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

விக்ரமின் வெற்றிக்குப் பிறகு, கமல் லோகேஷ் கனகராஜுக்கு ஒரு காரையும், படத்தில் கேமியோவாக நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தையும் பரிசாக வழங்கினார். சூர்யாவும் கமல்ஹாசனும் அடுத்த படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.