மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியில் இருந்து 12,000 கன அடியாக குறைப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியில் இருந்து 12,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா  மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மேட்டூரில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேட்டூர் அணைக்கு சீராக நீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் 109.89 கன அடியாக நீடிக்கிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.