Sri Lankan Crisis: அரசு அலுவலங்களும் பள்ளிக்கூடங்களும் மூடப்படுகிறது: இலங்கை அரசு

கொழும்பு: எரிபொருள் இருப்புக்கள் விரைவாக குறைந்து வரும் நிலையில் இலங்கையில் எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கு அந்நிய செலாவணி இல்லாமல் திண்டாடுகிறது. இது நாட்டின் பொருளாதாரத்தின் பல துறைகளை முடக்கியிருக்கிறது. 

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறும் இலங்கையில் நிலைமைகள் தொடர்ந்து மிகவும் மோசமாகிக் கொண்டு இருக்கும் நிலையில், நாளை (2022, ஜூன் 20 திங்கட்கிழமை) முதல் அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்படும்.

 கடந்த சில மாதங்களாக மோசமான பொருளாதார நெருக்கடியில் ஏற்பட்ட சிக்கல்களால் தொடர்ந்து தத்தளித்து வரும் இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, திங்கள்கிழமை முதல் பொதுத்துறை அலுவலகங்களை மூடுவதாக அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க | இலங்கையில் உச்சம் தொட்ட பெட்ரோல் விலை; ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.450

கொழும்பு நகர எல்லையிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளி ஆசிரிர்களை, அடுத்த வாரம் முதல் இணையவழி வகுப்புகளை நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. நீண்டகால மின்வெட்டு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்கள் வேகமாக குறைந்து வருவதால், இலங்கை தனது இறக்குமதிகளுக்கு அன்னியச் செலாவணி இல்லாமல் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது, இது நாட்டின் பொருளாதாரத்தின் பல துறைகளை முடக்கியுள்ளது.

இதனையடுத்து, நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில், வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் பாம்பு வரிசையில் காத்திருந்து பலமணிநேரம் எரிபொருளுக்காக காத்திருப்பதால் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Sri Lanka Crisis: பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் பெண்கள்

இலங்கை அரசு அறிவிப்பு

“எரிபொருள் விநியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள், பலவீனமான பொது போக்குவரத்து அமைப்பு மற்றும் தனியார் வாகனங்களைப் பயன்ப டுத்துவதில் உள்ள சிரமம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு திங்கள்கிழமை முதல் குறைந்தபட்ச ஊழியர்களை வேலைக்கு வர அனுமதிக்கிறது” என்று இலங்கை பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்கள் தொடர்ந்து பணிக்குத் வரவேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த சில மாதங்களாக நாளொன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்சாரம் தடைப்பட்டுள்ளது. 

இந்த வார தொடக்கத்தில், இலங்கையின் அரசாங்கம் பொருளாதார மீட்சியை எளிதாக்குவதற்கும், நிறுவனங்களின் வருமானத்தின் அடிப்படையில் 2.5 சதவீத சமூக பங்களிப்பு வரியை விதிப்பது என்று முடிவெடுத்தது. மேலும் பெரும்பாலான பொதுத்துறை ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமையும் விடுமுறை தினமாக அறிவித்தது.  

மேலும் படிக்க | ஆபத்தை உணராமல் இடம்பெயர முற்படும் இலங்கை மக்கள்

உணவு நெருக்கடி
அதிகரித்து வரும் உணவு நெருக்கடியைத் தணிக்கும் வகையில் விவசாயத்தில் ஈடுபடுவதற்காக அடுத்த மூன்று மாதங்களுக்கு அரசாங்க அதிகாரிகளுக்கு வாரத்திற்கு ஒருமுறை விடுமுறை அளிக்கும் நடவடிக்கைக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டின் 22 மில்லியன் மக்கள்த்தொகையில் சுமார் நான்கு முதல் ஐந்து மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையால் நேரடியாக பாதிக்கப்படலாம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.  

அந்நிய செலாவணி நெருக்கடியால், வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனதால் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் திவாலாகிவிட்ட நாடு, 2026 ஆம் ஆண்டுக்குள் செலுத்த வேண்டிய சுமார் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இந்த ஆண்டுக்கான 7 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனை நிறுத்தி வைப்பதாக ஏப்ரல் மாதத்தில் அறிவித்தது.

இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 51 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானிலும் அந்நிய செலாவணி நெருக்கடி அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்ற 21 இலங்கையர்கள் கைது! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.