தேங்காயின் விலையும் அதிகரிக்கிறது


தேங்காய் ஒன்றின் விலையை 200 ரூபாவாக அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.  

தேங்காய் உற்பத்தி தொழில் நெருக்கடியில் உள்ளதன் காரணமாக  உற்பத்திச் செலவை சமாளிக்கும் வகையில் தேங்காய் ஒன்றின் விலையை உயர்த்துவது அவசரியம் என தென்னை உற்பத்தியாளர் சங்கத்தின் நிறைவேற்று உறுப்பினரான பேராசிரியர் தீபால் மேத்யூ தெரிவித்துள்ளார். 

தேங்காய் இனி இல்லை

தேங்காயின் விலையும் அதிகரிக்கிறது

தற்போதைய நிலை 2025 இற்குப் பிறகு நீடித்தால் தேங்காய் இருக்காது, மேலும், நாங்கள் தேங்காய் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ள அவர் உரத்தை கொண்டு வருவதால் மட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது.  உற்பத்தி செலவு கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் சுமார் 150 மில்லியன் தேங்காய்கள் உள்நாட்டில் நுகரப்படுகின்றன, மேலும் 100 மில்லியன் தேங்காய்கள் பதப்படுத்தும் தொழிலுக்கு அனுப்பப்படுகின்றன.

ஆனால் இப்போது நெருக்கடி நிலையால் பதப்படுத்துவதும் ஏற்றுமதி செய்வதும் பாதிக்கப்பட்டுள்ளது என தென்னை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியின் விளைவாக, பல தென்னை விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்க முயற்சிக்கின்றனர், இது கடந்த ஆண்டு 480 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாயை ஈட்டிய தொழிலுக்கு கணிசமான அடியாக இருக்கும் வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.