ரயில் வருவதை அறியாமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி: என்ன செய்தார் ரயில்வே காவலர்?

ரயில் நிலையத்தில் ரயில் வருவதை அறியாமல் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டியை துரிதமாகச் செயல்பட்டு மீட்ட ரயில்வே போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் லலித்புர் ரயில் நிலையத்தில் நேற்று மாலை வயதான பெண்மணி ஒருவர் ரயில் வேகமாக வருவதை அறியாமல் தளர்ந்த நடையுடன் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். இதனை அருகிலிருந்து கவனித்த ரயில்வே காவலர் ஒருவர் சட்டென பாய்ந்து அந்தப் பெண்ணை பிளாட்பாரத்துக்கு இழுத்துபோட்டு அவரது உயிரைக் காப்பாற்றினார். சில நொடிகள் தாமதித்திருந்தால் கூட அந்த பெண் ரயிலில் சிக்கி விபத்து நிகழ்ந்திருக்கக் கூடும். ஆனால் ரயில்வே காவலரின் துணிச்சலான செயலால் அந்த பெண் காப்பற்றப்பட்டிருக்கிறார். ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சிகளை ரயில்வே அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

आरपीएफ कर्मी की सतर्कता और तत्परता से बचाई गई महिला की जान!

झांसी मंडल के ललितपुर स्टेशन पर पटरी पार कर रही एक बुजुर्ग महिला को वहां तैनात रेलवे सुरक्षाकर्मी ने अपनी जान पर खेलकर बचाया।

सभी से अनुरोध है कि एक से दूसरे प्लेटफॉर्म पर जाने के लिए फुट ओवर ब्रिज का उपयोग करें। pic.twitter.com/HZUCEXvbjs
— Ministry of Railways (@RailMinIndia) June 18, 2022

இதையும் படிக்கலாம்: முன்விரோதத்தால் நேர்ந்த கொடூரம் – தம்பியால் அண்ணனுக்கு நேர்ந்த பரிதாபம்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.