ரூ.350 கோடி கல்விக் கடன் வழங்க தமிழக அரசு இலக்கு; அமைச்சர் செந்தில் பாலாஜி

Tamil Nadu govt sets target of Rs 350 crore to provide education loans: Minister: இந்த ஆண்டு ரூ.350 கோடி கல்விக் கடன் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சனிக்கிழமை தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: எல்.முருகனை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்; கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

வங்கிகளின் கல்விக் கடன் வழங்கும் விழா கோவையில் நடந்தது. இந்த விழாவில் கலந்துக் கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 293 மாணவர்களுக்கு ரூ.44 கோடி கடனுதவி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்னும் 30 நாட்களில் மாணவர்களுக்கு ரூ.100 கோடி கடன் வழங்கப்படும். இந்த ஆண்டு ரூ.350 கோடி கல்விக் கடன் வழங்க தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. சிபில் ஸ்கோர் அடிப்படையில், வங்கிகள் கல்வி கடன் உதவியை பரிசீலனை செய்வதைத் தவிர்த்து, மாணவர்களுக்கு உதவும் வகையில் அவர்களின் எதிர்கால நலனில், அக்கறை கொண்டு கடன் வழங்க முன் வர வேண்டும். மாணவர்கள் கல்வி கடன் பெற தங்கள் கல்வி நிறுவனங்களை அணுகலாம் அல்லது வங்கிகளில் நேரடியாக கடன் பெறுவதில் சிரமம் இருந்தால் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம், என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.