ரஷ்ய படையின் முற்றுகையில்…பிடிபட்டார் உக்ரைனிய தளபதி: RIA தகவல்


 உக்ரைனின் செவெரோடோனெட்க் நகரை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள் அந்த நகரின் உக்ரைனிய ராணுவ தளபதியை அதிரடியாக சிறைப்பிடித்து இருப்பதாக ரஷ்யாவின் RIA தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் கிழக்கு உக்ரைனிய நகரமான செவெரோடோனெட்ஸ்க் தீவிரமாக நடைபெற்று வருகிறது, நகரத்தின் பொதுமக்கள் வெளியேறுவதற்கான மூன்று தரை பாலங்களையும் ரஷ்ய படைகள் ஏவுகணைகளை கொண்டு முழுவதுமாக தகர்த்துள்ள நிலையில், அனைவரும் சரணடையுமாறு ரஷ்ய ராணுவம் தொடர்ந்து எச்சரிக்கை அளித்து வருகிறது.

இந்தநிலையில், கிழக்கு உக்ரைனிய போரில் மூலோபாய நகரான செவெரோடோனெட்ஸ்கின் புறநகரில் உள்ள மெட்டல்கினோ கிராமத்தை ரஷ்ய கையகப்படுத்தியபோது, உக்ரைனின் “ஐடார்” பட்டாலியன் ராணுவ குழுவின் தளபதியை ரஷ்ய ராணுவம் சிறைப்பிடித்து இருப்பதாக சட்ட அமலாக்க வட்டாரம் ரஷ்ய செய்தி நிறுவமான RIAவிடம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய படையின் முற்றுகையில்...பிடிபட்டார் உக்ரைனிய தளபதி: RIA தகவல்photo: EPA-EFE

அத்துடன் RIA செய்தி அறிக்கைகளின் அடிப்படையில், ரஷ்ய ராணுவத்தின் தற்போதைய போர் நடவடிக்கையானது, மெட்டல்கினோவை ஒட்டிய சிரோட்டினோ கிராமத்தைச் சுற்றி நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: ரயில் வேலை நிறுத்தம்: அப்பாவி பிரித்தானியா மக்கள் தண்டிக்கப்படுவார்கள்: அரசு எச்சரிக்கை!

மேலும் உக்ரேனிய டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணத்தின் கவர்னர் Valentyn Reznichenko, ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் Novomoskovsk-இல் உள்ள எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அழிக்கப்பட்டதாக சனிக்கிழமை தெரிவித்தார். 

ரஷ்ய படையின் முற்றுகையில்...பிடிபட்டார் உக்ரைனிய தளபதி: RIA தகவல்photo: EPA-EFE



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.