சென்னை: சிறுவாணி குடிநீர் திட்டத்தில் தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு கேரளா அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சிறுவாணி அணையில் நீர் சேமிப்பை பராமரிக்கவும், குடிநீர் விநியோகத்தை மேலும் அதிகரிக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.கோவை மாநகராட்சி பகுதிகளில் தங்குதடையின்றி குடிநீர் வழங்கிட அணையின் முழு கொள்ளளவுக்கு உயர்த்தி பராமரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.