ஆவின் பாலகத்தில் சிக்கன் 65 உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்த மூன்று கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில்உயர் தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆவின் பாலகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பத்தூரில் புதிய பால் பண்ணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.