பக்கம் பக்கமாக விளம்பரம்: ஓ.பி.எஸ் தரப்பு அதிரடி அஸ்திரம்

Newspaper advertisement supports OPS and questions opposition: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுகவின் தொடர் தேர்தல் தோல்விகளுக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆலோசனைகளைப் பின்பற்றாமல், அவரது ஆதரவாளர்களை ஓரம் கட்டியதே காரணம் என நாளிதழ் விளம்பரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தங்கள் ஆதரவு நிர்வாகிகளை தினமும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒருபக்கம் மூத்த நிர்வாகிகள் இருவரை சமாதானப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பி.எஸ்-ஐ விட கட்சிக்குள் இ.பி.எஸ்-க்கே அதிக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், இன்று நாளிதழ்களில் வெளியான விளம்பரம் ஒன்று ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக எதிர் தரப்பினரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதையும் படியுங்கள்: ரூ.350 கோடி கல்விக் கடன் வழங்க தமிழக அரசு இலக்கு; அமைச்சர் செந்தில் பாலாஜி

இன்றைய நாளிதழ்களில் அதிமுகவின் விசுவாசமிக்க தொண்டர்கள் என்ற பெயரில் விளம்பரம் ஒன்று வெளியானது. அதில் அதிமுகவில் தாங்கள் அதிகாரமிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்த ஒரு சிலர், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை ஓரம் கட்டினர் என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது. மேலும், ஆட்சியில் இருந்தப்போதே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற ஓ.பி.எஸ்-இன் கருத்தை ஏன் ஏற்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கட்சியிலிருந்து விலகிச் சென்ற ஒரு குழுவினரை மீண்டும் கட்சியில் சேர்த்து, ஒரே இயக்கமாக அதிமுகவை முன்னெடுத்து செல்லாததால், அதிமுகவின் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது என்றும், 10.5% இடஒதுக்கீட்டை முறைப்படி ஆணையம் அமைத்து நிறைவேற்றாமல், அவசர அவசரமாக நிறைவேற்றியதே, தென்மாவட்டங்களில் அதிமுகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்றும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஏன் சுதந்திரமாக செயல்பட விடவில்லை? என்றும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், ஓ.பி.எஸ்-ன் வியூகத்தை ஏன் பின்பற்றவில்லை? என்றும், அவர் கூறிய திறமையானவர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்றும், அந்த விளம்பரத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.