விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம்… ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி …

விஜய் நடிக்கும் Thalapathy 66 படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் 21 ம் தேதி மாலை 6:01 க்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வரும் 22 ம் தேதி விஜய் பிறந்தநாளை ஒட்டி இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்ற அறிவிப்பு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Thalapathy 66 படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஷாம், ஸ்ரீநாத், குஷ்பு, சங்கீதா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் ‘மோஷன்’ போஸ்டராக வெளியாகும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. விஜயின் ‘கத்தி’ படத்திற்கு தான் தமிழில் முதல் மோஷன் போஸ்டர் வெளியானது.

தற்போது விஜய் 66 மோஷன் போஸ்டர் வெளியாகும் பட்சத்தில் கத்தி திரைப்படத்திற்குப் பின் மோஷன் போஸ்டர் வெளியாகும் விஜயின் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.