IND Vs SA: இறுதிப் போட்டியில் தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் தென் ஆப்பிரிக்க அணியுடன் இந்திய அணி மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இந்திய அணி தொடரை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடைந்துள்ளது.

இந்த நிலையில், இந்த தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி இந்திய அணி பேட்டிங் செய்கிறது.

இந்திய அணியில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்) ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணியில் குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ் (கேப்டன்), லுங்கி நிகிடி, அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.