அக்னிபத்: அமெரிக்கா தொடங்கி சீனா வரை… வெளிநாடுகளில் எப்படி நடைபெறுகிறது ராணுவ ஆள்சேர்ப்பு?

அக்னிபத்… இந்த வார்த்தையைக் கேட்டதும் தற்போது ராணுவத்தைவிடவும் ரயிலும், ரயில் நிலையமும்தான் ஞாபகத்துக்கு வருகின்றன. ஆம், இந்த ஒற்றைத் திட்டம் தேசியளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அக்னிபத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுபவர்களின் எதிர்காலம் குறித்த ஐயமே இந்த போராட்டங்களுக்குக் காரணம் என்கிறார்கள்.

அக்னிபத் என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த திட்டம் ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நாடுகளின் திட்டங்களை தழுவித்தான் இந்தியாவில் அக்னிபத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இந்தியாவில் கடும் எதிர்ப்புக்குள்ளாகியிருக்கும் இந்த திட்டம் மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் நாடுகளில் எப்படி நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது… இந்தத் திட்டத்தின் சட்டதிட்டங்கள் அங்கெல்லாம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்ப்போம்..!

ரஷ்யா:-

ரஷ்யா

ரஷ்யாவில் அந்த நாட்டின் ஹைபிரிட் மாடல் மூலம் இந்த திட்டத்துக்கு கான்ட்ராக்ட் முறையில் ஆள்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஒரு வருடம் பயிற்சி பெற்று ஒரு வருடம் ராணுவத்தில் பணியாற்றுகின்றனர். பின்பு இவர்கள் ரிசர்வ் லிஸ்டில் வைக்கப்படுவர். மேலும் திட்டத்திலிருந்து நிரந்தர ராணுவ வீரர்களும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த ராணுவ வீரர்களுக்குப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கும் சலுகையும் வழங்கப்படுகிறது. அதேபோல இவர்கள் ராணுவ நிறுவனங்களில் சேர்ந்து கற்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

அமெரிக்கா:-

அமெரிக்கா

அமெரிக்காவில் தன்னார்வ அடிப்படையில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த திட்டம் நான்கு ஆண்டுகளுக்கானது. தேவை ஏற்படுமெனில் மேலும் நான்கு ஆண்டுகளுக்குத் திட்டம் நீட்டிக்கப்படும். இந்த திட்டத்தில் ராணுவ வீரர்கள் நிரந்தர ராணுவப்படைக்கும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இருபது வருடங்களுக்கு ராணுவத்தில் பணியாற்றினால் ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படும். நான்கு ஆண்டுகள் முடித்துச் செல்லும் ராணுவ வீரர்களுக்குப் பல சலுகைகள் வழங்கப்படும்.

சீனா:-

சீனாவில் இந்த திட்டம் அனைவருக்கும் கட்டாயமானது. சீனாவில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் இருப்பதால் ஒவ்வொரு வருடமும் 8 லட்சம் இளைஞர்கள் ராணுவத்தில் இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றக் காத்திருக்கிறார்கள். ஆனால் 4.5 லட்ச இளைஞர்களே சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கானது. இதில் நாற்பது நாள்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. தேர்வு விதிகளின் அடிப்படையில், பல வீரர்கள் நிரந்தர பணியிலும் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டத்தில் இரண்டு வருடங்கள் பணியாற்றிய வீரர்களுக்குத் தொழில் தொடங்க சலுகைகளுடன் கூடிய கடன்கள் வழங்கப்படுகின்றன. மேலும் வரிச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

பிரான்ஸ்:-

பிரான்ஸ்

இந்த நாட்டில் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் ஆள்கள் சேர்க்கப்படுகிறார்கள். பல மாடல்கள் மூலம் இந்த ஒப்பந்தத்தில் ஆள்கள் சேர்க்கப்படுவர். ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை இந்த ஒப்பந்தம் போடப்படும். இந்த ஒப்பந்தங்கள் புதுப்பிக்கவும் படலாம். இவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். மேலும், இவர்கள் 19 ஆண்டுகள் வரை பணியாற்றினால் ஓய்வூதியம் வழங்கப்படும்.

இஸ்ரேல்

இஸ்ரேல் நாட்டில் அனைவரும் ராணுவத்தில் கட்டாயமாக பணியாற்ற வேண்டும். ஆண்கள், பெண்கள் முறையே குறைந்தது 24 மாதங்கள் பணியாற்ற வேண்டும். இவர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கப்படும். திட்டம் முடிந்தவுடன் இவர்கள் ரிசர்வ் லிஸ்டில் வைக்கப்பட்டு எந்த நேரத்திலும் இவர்கள் பணிக்கு அழைக்கப்படலாம். இந்த திட்டத்தில் பணியாற்றிய பத்து சதவிகிதத்தினர் ராணுவத்தில் ஏழு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படுவர். 12 ஆண்டுகள் பணியாற்றிய வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.