இந்த படத்தில் எத்தனை விலங்குகள் இருக்கு? சரியா கண்டுபிடிங்க பார்க்கலாம்?

சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகத்தையும் ஒரு புயல்போல தாக்கி வருகிறது. அதிலும் விலங்குகளைப் பற்றிய ஆப்டிகல் இல்யூஷன் படம் நெட்டிசன்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டிவருகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கு வேலை தருகிற ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. சில ஆப்டிகல் இல்யூஷன்கள் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தி வருகின்றனர்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. இதனால், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வேகமாக வைரலாகி வருகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் பங்கள் பண்டைய கிரேக்கர்களின் காலத்திலேயே இருந்து வந்துள்ளது. கிரேக்கர்கள் தங்கள் கட்டிடக்கலை மற்றும் கலையில் ஆப்டிகல் இல்யூஷனைப் பயன்படுத்தினர். இவை முதலில் கிரேக்கர்களின் கட்டிடங்களின் கூரைகளில் காணப்பட்டதாக நம்பப்படுகிறது. அந்த காலத்தில் கோயில்களில், கூரைகள் சாய்வாகக் கட்டப்பட்டது.

இந்த புதிய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. ஆனால், அவை எல்லாம் ஒரே படத்தில் மறைந்திருக்கிறது. ஒவ்வொரு விலங்காகக் கண்டுபிடிக்கும்போது, நிச்சயமாக நீங்கள் வியப்பில் மூழ்கிப்போவீர்கள். இந்த படத்தில் எத்தனை விலங்குகள் மறைந்திருக்கிறது என்று சரியாக கண்டுபிடியுங்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், நீங்கள் முதலில் ஒரு பெரிய யானையின் கருப்புப் படம் மற்றும் கழுதையின் வெள்ளைப் படம். இப்படி அதன் உடலில் பல்வேறு விலங்குகள் மறைந்துள்ளன. அது உங்கள் குழப்பம் அடையச் செய்கிறது இல்லையா?

இந்த படம் பேஸ்புக்கில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த பலரும் இதில் எத்தனை விலங்குகள் என்று கூறி விவாதித்து வருகின்றனர். சிலரால் கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த படத்தில் 5 விலங்குகள் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். பத்து விலங்குகள் உள்ளன என்று சிலர் கூறுகிறார்கள். எனினும், அது உண்மையல்ல.

கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இந்த படத்தைக் கூர்ந்து பார்த்த பிறகு, படத்தில் யானை, கழுதை, நாய், பூனை, எலி, பாம்பு, மீன் போன்றவை இருக்கிறது. இதில், மொத்தம் பதினாறு விலங்குகள் இருக்கிறது. நீங்களே பாருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.