வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை,-மஹாராஷ்டிராவில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், புனேயைச் சேர்ந்த 43 வயது நபர் தேர்ச்சி பெற்றார். அவரது மகன் தோல்வி அடைந்தார்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்தவர் பாஸ்கர், 43. குடும்ப வறுமை காரணமாக ஏழாம் வகுப்புக்கு மேல் அவரால் படிக்க முடியவில்லை. திருமணமான பின், படிக்க முயற்சித்தார்; ஆனால் முடியவில்லை. சில மாதங்களுக்கு முன், மஹாராஷ்டிராவில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. பாஸ்கர் இந்த தேர்வை எழுதினார்.
இதற்காக இரவு, பகலாக படித்தார். இவருடைய மகனும் இந்த தேர்வை எழுதினார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில் பாஸ்கர் தேர்ச்சி அடைந்தார். ஆனால் அவரது மகன் தோல்வி அடைந்தார். இது குறித்து பாஸ்கர் கூறியதாவது:சிறு வயதில் நிறைவேறாத ஆசையை, இப்போது நிறைவேற்றி விட்டேன். இதற்காக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து படித்தேன். அதற்கு பலன் கிடைத்துள்ளது. ஆனால், என் மகன் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement