சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கே.ஆர்.தோப்பூரை சேர்ந்த கீர்த்தி என்ற இளம்பெண்ணிற்கும் கருக்கல்வாடி கிராமத்தை சேர்ந்த கஜேந்திரன் என்ற வாலிபருக்கும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில், கீர்த்தியை காணவில்லை என்று கணவர் மற்றும் பெண்ணின் பெற்றோர் தேடி வந்துள்ளனர். இதனிடையே கீர்த்தி இரும்பாலை பகுதியை சேர்ந்த தேவ் என்ற வாலிபருடன் ஓமலூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார்.
பின்னர் இதுகுறித்து ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் கீர்த்தி கருக்கல்வாடியை சேர்ந்த கஜேந்திரன் மற்றும் இரும்பாலையை சேர்ந்த தேவ் ஆகிய இருவரையும் காதலித்து வந்ததாக தெரிய வந்திருக்கிறது.
இவர்கள் மூவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், கஜேந்திரன் முறைப்படி பெண் கேட்டு, பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கீர்த்தியை திருமணம் செய்துள்ளார். மேலும், திருமணத்திற்கு வேண்டிய பட்டு புடவை, நகை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கீர்த்தியை அழைத்து சென்று, கீர்த்தி தேர்வு செய்தவற்றையே வாங்கி கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், கஜேந்திரனை விட்டு, காதலன் தேவுடன் வாழ்வதாக கூறியும், பாதுகாப்பு வழங்குமாறும் போலீசாரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்து வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ALSO READ:
தாடி வைத்தால் திருமணத்துக்கு தடை.. ராஜஸ்தான் பஞ்சாயத்து முடிவால் பரபரப்பு! ஏன் தெரியுமா?
மேலும், கஜேந்திரனும் வந்து கீர்த்தியுடன் பேசினார். சுமார் மூன்று மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தையில் கீர்த்தி காதல் கணவரான கஜேந்திரனுடன் செல்ல சம்மதித்தார்.
ஆனால், காதலன் தேவ், கீர்த்தியை விட்டு செல்லமுடியாது என்று கூறி, பிரச்சனை செய்ததோடு, அவரது உறவினர்கள் காரில் ஏற்றி செல்ல முற்பட்டபோது, செல்லாமல் கீர்த்தியுடன் சேர்த்து வைக்குமாறும் தேவ் கூச்சலிட்டிருக்கிறார்.
இதையடுத்து ஓமலூர் போலீசார் தேவ்விற்கு ஆலோசனை, அறிவுரைகளை வழங்கி, உறவினர்களுடன் அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தால் காவல் நிலையத்தில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.
ALSO READ:
ஒரு மாசம் முன்னாடிதான் கல்யாணம்.. ஆனால் 4 மாசம் கர்ப்பம்: அதிர்ந்துப்போன கணவர்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM