டேராடூன்-உத்தரகண்டில் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் கழிப்பறையில் வைத்து, 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில், 15 வயது சிறுவன், தன் பெற்றோருடன் தங்கியிருந்தான். நேற்று முன்தினம் அந்த சிறுவன், ஹோட்டலில் உள்ள பெண்கள் கழிப்பறைக்குச் சென்றான். அந்த அறையை உட்புறமாக தாழிட்ட அந்த சிறுவன், அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த, 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தான். அந்த பெண், உதவிக் குரல் எழுப்பியும், கழிப்பறை பூட்டப்பட்டிருந்ததால், குரல் வெளியில் கேட்கவில்லை.
தன் வெறியை தீர்த்துக் கொண்ட அந்த சிறுவன், அங்கிருந்து தப்பி ஓடினான். பாதிக்கப்பட்ட பெண், போலீசில் புகார் அளித்தார். அந்த பெண்ணுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் கைது செய்யப்பட்ட அந்த சிறுவன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான்.
Advertisement