ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த இருவேறு துப்பாக்கிச்சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் குப்வாரா, குல்காம் பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காஷ்மீர் போலீசாருடன் சேர்ந்து ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது, குல்காமின் தல்காம் கன்ஜி போரா பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு வீரர்கள் கொடுத்த பதிலடியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதே போல், குப்வாராவில் லோலாப் பகுதியில் தீவிரவாதிகளை தேடி சென்ற போது, அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராணுவமும் பதிலடி கொடுத்தது. இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இது குறித்து காஷ்மீர் ஐஜிபி விஜயகுமார் தனது டிவிட்டரில், `சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் இருவரில், ஒருவர் பாகிஸ்தானுடன் தொடர்பில் உள்ள தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி என அடையாளம் காணப்பட்டுள்ளான். மற்றொருவர் யார் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை,’ எனறு கூறியுள்ளார்.