தலசீமியா (Thalassemia) நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் : இரத்ததானம் வழங்கும் முகாம்

பெற்றோர்கள் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கவே விரும்பினாலும் பெற்றோர்களிடமிருந்து மட்டுமே பிள்ளைகள் பெறக்கூடிய் நோய் ஒன்று உண்டு என்றால் அது தலசீமியாதான்.

தலசீமியா அல்லது தலசீமியா (Thalassemia) என்பது பின்னடையும் தன்மையுள்ள மரபு சார்ந்த இரத்த நோய் ஆகும். தலசீமியாவில், மரபு குறைகள் ஹீமோகுளோபினைச் சேர்ந்த குளோபின் சங்கிலியின் குறைந்த சேர்க்கை வீதத்தால் ஏற்படுகிறது. ஒரு வகையான குளோபின் சங்கிலியின் குறைந்த சேர்கையால் இயற்கைக்கு மாறான மூலக்கூறுகள் ஏற்படுவதுக்கு வாய்ப்பு உண்டு. அதன் காரணமாக அனீமியா என்கிற தலசீமியாவின் தனித்தன்மை அறிகுறி உருவாகும்.

தீவிரமான மரபணுரீதியான ரத்த குறைபாடு. குழந்தை பிறந்த பிறகு இந்நோய்க்கு ஆளாவதில்லை , பிறவியிலேயே இந்நோய் பாதிப்புடன் தான் பிறக்கிறார்கள். உறவுக்குள் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தைக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சில குழந்தைகள் தலசீமியா பாதிப்புடன் பிறக்கிறார்கள். இந்நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்வதற்காக பல திட்டங்கள் சுகாதார அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தாலசீமீயா நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு குழந்தைக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் முழு ரத்த பரிசோதனை , சிவப்பணுக்களின் எண்ணிக்கை ( முதிரா) ஹீமோகுளோபின் , எலெக்ட்ரோபெரோசிஸ் பரிசோதனைகள் செய்யப்படும்.

பிறகு குழந்தையின் உடல் நலனை பொறுத்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ரத்தம் ஏற்ற வேண்டும். ரத்தத்தை ஏற்றுவதால் குழந்தைக்கு இரும்புச்சத்து அளவு அதிகரிக்கும் . உடலில் அளவுக்கதிகமான இரும்புச்சத்தும் இருக்ககூடாது என்பதால் இவை அதிகமாகாமல் இருக்க அதற்கு தகுந்த மாத்திரைகளை தவறாமல் எடுத்துகொள்ள வேண்டும். குழந்தை வளர வளர உடல் எடைக்கேற்ப ரத்தம் ஏற்றுவதும், மருந்தின் அளவும் அதிகரிக்கும். வாழ்நாள் முழுவதும் ரத்தமும் மாத்திரைகளும் மட்டுமே அவர்களை கட்டுக்குள் வைக்கும்.

இன்றைய (18) தினம் பதுளை உஸ்கோட்  நிறுவனம் மற்றும்    மாகாண வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் மற்றும் ரத்த வங்கி அதிகாரிகள் பங்கேற்பில் தியத்தலாவை இராணுவ முகாம் மற்றும் பிராந்திய பொலிஸ் தலைமையகம் இணைந்து யா தலசீமியா அல்லது தலசேமியா (Thalassemia) நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் இரத்ததானம் வழங்கும் முகாம் நடத்தப்பட்டது இதன்போது நூற்றுக்கும் அதிகமான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் இரத்த தானம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இரா சுரேஷ்குமார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.