பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்று முடிந்தது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 37 ஆயிரம் பேர் விண்ணப்பித்து நிலையில், சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். அதேபோல பத்தாம் வகுப்பு பொது தேர்வை பொருத்தவரை 9 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத பதிவு செய்த நிலையில், சுமார் 9 லட்சத் துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது.
இந்த வகையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வை சுமார் 16 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் எழுதியுள்ளனர். இதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு வெவ்வேறு நாட்களில் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவது வழக்கம்.
ஆனால் இந்த முறை ஒரே நாளில் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட முடிவு செய்துள்ளது. அதன்படி, 9:30 மணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். பிற்பகல் 12 மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிவித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.