மக்கள் யோகா பயிற்சி செய்ய வேண்டும்: ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: நோய்கள் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான உடல்நல பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இன்றைய காலகட்டத்தில் மக்கள் யோகா பயிற்சி செய்வது மிக முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மைசூர் அரண்மனை மைதானத்தில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார் என ஆயுஷ் அமைச்சர் சர்வானந்த சோனோவால் கூறியுள்ளார்.

பிரதமருடன் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, எம்.பி.க் கள், கர்நாடகா அமைச்சர்கள், புகழ்பெற்ற யோகா குருக்கள் உட்பட 15,000 ஆயிரம் பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்யவுள்ளனர்.

‘மனிந நேயத்துக்கு யோகா’என்பது இந்தாண்டு கொண்டாடப் படும் 8-வது சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளாக இருக்கும் என ‘மனதின் குரல் நிகழ்ச்சியில்’ பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். அதன்படி மனித நேயத்தில் கவனம் செலுத்தும் வகையில் இந்தாண்டு மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்புநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘தற்போது மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம், நோய்கள் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான உடல்நல பாதிப்புகள் அதிகரித்து வருவதால், யோகா பயிற்சி மிக முக்கியமானதாக மாறியுள்ளது. அதனால் நல்ல ஆரோக்கியம் மற்றும் உடல்நலத்துக்கும் மக்கள் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

அதோடு யோகா குறித்த தனது எண்ணங்கள் மற்றும் பலவித ஆசனங்களின் வீடியோவையும் பிரதமர் மோடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்தாண்டு விடுதலையின் 75-வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால், நாட்டில் உள்ள 75 வரலாற்று சிறப்பு மிக்க மற்றும் கலாச்சார மையங்களில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் 75 பேர் பங்கேற்கின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் நகரில் உள்ள புகழ்பெற்ற ஜோதிர்லிங்க திரிம்பகேஷ்வர் கோயில் வளாகத்தில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பங் கேற்கிறார். கோவையில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பாது காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.

‘மனிந நேயத்துக்கு யோகா’ என்பது இந்தாண்டு கொண்டாடப்படும் 8-வது சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளாக இருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.