வாட்ஸ் அப் மூலம் இனி எல்லாமே: இந்தியா போஸ்ட் அசத்தல் திட்டம்

தபால் சேவைகள் மற்றும் வங்கி சேவைகளை வாட்ஸ்அப் மூலம் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி தொடங்கப்பட்டது என்பதும் இந்த வங்கி தொடங்கப்பட்டது முதல் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் இந்த வங்கி, நிதிச் சேவை மற்றும் வங்கி சேவைகளை செய்து வருகிறது என்பதும் அதே போல் மிக வேகமாக டிஜிட்டல் மயமாகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

நீங்க பாமாயில் தாங்க, நாங்க கோதுமை தருகிறோம்: இந்தோனேஷியாவிடம் இந்தியா பண்டமாற்று பேச்சுவார்த்தை!

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி

இந்த நிலையில் தற்போது டிஜிட்டல் சேவையில் அடுத்த பரிணாமத்தை நோக்கி இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி சென்றுள்ளதாக தெரிகிறது. இதற்காக இந்தியா போஸ்ட் வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

வங்கி கணக்கு தொடங்குவது, வங்கியில் உள்ள இருப்புத் தொகையை தெரிந்து கொள்வது, பாஸ்வேர்டு மாற்றுவது போன்ற அடிப்படை சேவைகளை இனி வாட்ஸ் அப் வாயிலாகவே இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளும் வகையில் புதிய வசதி ஏற்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டணி
 

கூட்டணி

இதற்காக இந்தியா போஸ்ட் நிறுவனம், வாட்ஸ்அப் நிறுவனத்துடன் உடன் கூட்டணி சேர இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆரம்ப காலத்தில் ஒரு சில அடிப்படை வசதிகளை மட்டும் இந்தியா போஸ்ட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அதற்கு பிறகு படிப்படியாக மற்ற அனைத்து சேவைகளும் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய வசதிகள்

புதிய வசதிகள்

அதேபோல் ஆரம்பகாலத்தில் ஒருசில குறிப்பிட்ட உறுப்பினர்கள் மட்டும் வாட்ஸ் அப்பில் பணம் எடுப்பது, பான் நம்பர் அப்டேட் செய்வது, ஆதார் மூலம் பண பரிவர்த்தனை செய்வது ஆகிய வசதிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதன்பிறகு படிப்படியாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என்றும் இந்தியா போஸ்ட் தகவல் தெரிவித்துள்ளது.

பார்சல் புக்கிங்

பார்சல் புக்கிங்

மேலும் பார்சல் புக்கிங், சம்பள கணக்கு, சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு ஆகியவற்றை தொடங்குவதற்கு வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தும் வசதியை எதிர்காலத்தில் இந்தியா போஸ்ட் வழங்க இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும் என்றும் இந்தியா போஸ்ட் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிராமப்புற வாடிக்கையாளர்கள்

கிராமப்புற வாடிக்கையாளர்கள்

மத்திய அரசின் 100 சதவீத பங்குகளை கொண்டுள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி இந்த புதிய வசதிகள் மூலம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய வசதி காரணமாக கிராமப்புறங்களில் இந்தியா போஸ்ட் வாடிக்கையாளர்கள் மிக எளிதில் தங்களது கணக்கில் உள்ள இருப்பை சரிபார்த்துக் கொள்வது உட்பட முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்று இந்தியா போஸ்ட் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India post payment bank joined with whatsapp: what are the benefits?

India post payment bank joined with whatsapp: what are the benefits? | வாட்ஸ் அப் மூலம் இனி எல்லாமே: இந்தியா போஸ்ட் அசத்தல் திட்டம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.