புதிய கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழகத்தில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை வரை, மாநிலத்தில் 16,000 க்கும் குறைவான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன மற்றும் 600 க்கும் குறைவானவர்கள் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தனர்.
ஆனால் கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் சுமார் 19,500 மாதிரிகள் (22% அதிகரிப்பு) பரிசோதிக்கப்பட்டன. இதில், மாநிலம் முழுவதும் 692 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
சென்னையில், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 300-ஐத் தாண்டியது, இங்கு 306 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு (122), திருவள்ளூர் (48), காஞ்சிபுரம் (43) ஆகிய மாவட்டங்களிலும் புதிய பாதிப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் மட்டும், புதிய தொற்றுகள் பதிவாகவில்லை.
மேற்கூறிய நான்கு மாவட்டங்களில், செங்கல்பட்டில் 9.9 சதவிகிதம் அதிக டெஸ்ட் பாசிட்டிவிட்டி விகிதம் (TPR) இருந்தது. இது சென்னை (7.5%) விட சற்று அதிகமாகவும், மாநிலத்தின் சராசரியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகவும் இருந்தது.
மத்திய அரசின் கொரோனா வழிகாட்டுதல்களை மேற்கோள் காட்டி, சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், அதிக டெஸ்ட் பாசிட்டிவிட்டி விகிதம் (TPR) 10 சதவீதத்தை தாண்டும்போது மட்டுமே கடுமையான கட்டுப்பாடுகள் தேவைப்படுவதாகவும், தற்போது, மாநிலத்தில் அத்தகைய சூழ்நிலை இல்லை என்றும் கூறினார்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 2 சதவீதத்தினருக்கு மட்டுமே மருத்துவமனை தேவை என்றும், 0.5%க்கும் குறைவானவர்களுக்கு ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படுவதாகவும் அரசு தகவல்கள் தெரிவித்தன.
எனினும், சிகிச்சைக்குப் பின் குணமாகும் நபர்களின் எண்ணிக்கையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. சனி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 200 அல்லது அதற்கு மேற்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது ஞாயிற்றுக்கிழமை 52 பேர் மட்டுமே நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
நகர மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், தற்போது, பெரும்பாலான பாதிப்புகள்’ லேசானது முதல் மிதமான அறிகுறிகளுடன் உள்ளன.
தொண்டை வலி, இருமல், சுவையின்மை மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று நகர சுகாதார அலுவலர் மருத்துவர் எம் ஜெகதீசன் தெரிவித்தார். “சோதனை’ ஆரம்பகால தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சைக்கு உதவும்,” என்று அவர் கூறினார்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் தனித்தனியாக மருந்துப் பெட்டிகள், குப்பை சேகரிப்பதற்காக மஞ்சள் பைகளை மாநகராட்சி விநியோகம் செய்யும். ஒவ்வொரு மண்டலத்திலும் தற்போது 500 கருவிகள் உள்ளன. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் ஆக்ஸிஜன் அளவைப் பரிசோதிக்கவும், அறிகுறிகள் கடுமையாக இருந்தால் 108 ஆம்புலன்ஸ்களை ஏற்பாடு செய்யவும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“