ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் Future Factory என்ற பெயரில் நடந்த வாடிக்கையாளர் தின நிகழ்வின் போது வரவிருக்கும் Ola எலக்ட்ரிக் காரின் முதல் டீசர் காட்சியை வெளியிட்டது. ஓலா தயாரிப்பாளர் தனது எலக்ட்ரிக் கார் லட்சியங்களை ஒரு நேர்த்தியான மற்றும் எதிர்காலத் தோற்றமுடைய 3 கார்களின் மாதிரி படங்களை டீசர் செய்துள்ளது.
ஓலா மின்சார கார்கள் பற்றிய எந்த விவரங்களையும் வெளியிடவில்லை, இருப்பினும், ஓலாவின் முதல் எலக்ட்ரிக் கார் பெரிய பேட்டரியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோராயமாக 70-80kWh திறன் கொண்டதாக இருக்கலாம். எனவே நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற திறன் கொண்டிருக்கும்.
ஓலா தனது மற்ற மாடல்களுக்கும் இதே பேட்டரி பேக்கை பயன்படுத்துமா என தெரியவில்லை.
முதல் மின்சார காரின் உற்பத்தி 2023 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘பெரிய செடான்’ ஆக இருப்பதால், ஓலா எலக்ட்ரிக் செடான் மலிவாக இருக்க வாய்ப்பில்லை ஓலா காரின் விலை ரூ.25 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
நிகழ்ச்சியில் பேசிய அகர்வால், வரவிருக்கும் Ola எலக்ட்ரிக் கார் குறித்த கூடுதல் விவரங்களை ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடும் என்று கூறினார்.