இ.பி.எஸ்-க்கு ஓ.பி.எஸ் அவசர கடிதம்: பொதுக்குழுவை தள்ளிவைக்க கோரிக்கை

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், வரும் 23-ந் தேதி நடைபெற உள்ள கட்சி பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்குமாறு ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு பொதுச்செயவலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஒருவாககப்பட்டு இரட்டை தலைமையில் கட்சி இயங்கி வந்தது. இதில் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்றும், ஒற்றை தலைமை இல்லாததே சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் என்று மாவட்ட செயலாளர்கள் கூறியிருந்தனர். மாவட்ட செயலாளர்களின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கட்சியில் ஒற்றை தலைமை நிர்வாகம் செயல்படுத்தும் முடிவுக்கு வந்தனர்.

இதில் யாருடைய தலைமையில் கட்சி இயங்கும் என்பது குறித்து குறித்து ஒபிஎஸ் இபிஎஸ் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு வாரமாக இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கட்சி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இயங்கவே அதிகமான நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.

இவர்கள் இருவரும் ஒருபுறம் ஆலோசனையில் ஈடுபட மறுபுறம், வரும் 23-ந் தேதி நடைபெற உள்ள கட்சி பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தொடர்பான ஆலோசனை தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஒற்றை தலைமை விவகாரம் கடுமையாக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று ஒபிஎஸ் இபிஎஸ்க்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கழகத்தின் நலன் கருதி 23.06.2022 அன்று நடைபெற உள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்த தற்போது தள்ளி வைக்கலாம். அடுத்த கூட்டத்திற்கு இடம் நாள் மற்றும் நேரத்தை கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய நாம் இருவரும் கலந்து ஆலோசித்து முடிவு செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.