10 பைசா செலவு இல்லாமல் இன்சூரன்ஸ் வாங்கலாம்.. புதிய திட்டம்.. பயன்பாட்டுக்கு வருமா..?!

இந்திய இன்சூரன்ஸ் சந்தை வர்த்தகம் வளர்ச்சி அடைய அதிகப்படியான வாய்ப்புகளும், ஆதாரங்களும் இருக்கும் நிலையில் எல்ஐசி ஐபிஓ தோல்வி போன்ற சில தடுமாற்றங்களும் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் இன்சூரன்ஸ் சந்தையையும், வர்த்தகத்தையும் வலிமைப்படுத்தும் விதமாக முக்கியமான திட்டத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இன்சூரன்ஸ் ரெகுலேட்டர் முன் வைக்கப்பட்டு உள்ளது.

டாடாவின் பிரம்மாண்ட திட்டம்.. ஏர் இந்தியாவுக்கான பலே வியூகம்.. இனி வேற லெவல்!

இன்சூரன்ஸ்

இன்சூரன்ஸ்

இன்சூரன்ஸ் திட்டங்களை வாங்கவும், இன்சூரன்ஸ் திட்டத்திற்கான ப்ரீமியத்தை நீண்ட கால அடிப்படையில் செலுத்தவும் ரீடைல் மற்றும் கார்பரேட் வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்கும் திட்டம் தற்போது இன்சூரன்ஸ் ரெகுலேட்டர் முன் வைக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் இல்லை

இந்தியாவில் இல்லை

இத்தகைய திட்டம் இதுவரையில் இந்தியாவில் இல்லை என்றாலும் பல உலக நாடுகளில் இத்தகைய திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் பெயர் ப்ரீமியம் பைனான்சிங் இன்சூரன்ஸ் பார்லேன்ஸ் ஆகும். இத்திட்டம் ஒப்புதல் பெற்றால் இச்சேவைக்குப் புதிய தளத்தை உருவாக்க வேண்டி வரும்.

நன்மை
 

நன்மை

இத்திட்டம் மூலம் இந்தியாவில் இன்சூரன்ஸ் வர்த்தகம் அதிகரிப்பு, இன்சூரன்ஸ் வாடிக்கையாளர் தக்கவைப்பு, பாதுகாப்பில் இருக்கும் இடைவெளி குறைப்பு ஆகிய பலன்கள் கிடைக்கும். இதேபோல் கன்ஸ்யூமர் மற்றும் கார்பரேட் நிதி சேவை பிரிவில் புதிய வர்த்தகம் உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும் என இன்சூரன்ஸ் துறைத் தலைவர்கள் கூறுகின்றனர்.

10 பைசா செலவு இல்லை

10 பைசா செலவு இல்லை

இந்த ப்ரீமியம் பைனான்சிங் சேவைக்கு, ப்ரோக்கர் அல்லது இன்சூரன்ஸ் நிறுவனம் ஒரு முறை மொத்தமாகச் செலுத்தப்படும் ப்ரீமியம் தொகையை நீண்ட கால அடிப்படையில் ப்ரீமியம் செலுத்தும் சலுகையை வழங்கி, அதற்கான கடனையும் அளிக்கும். இதன் படி நிதி சேவை (கடன்) அளிக்கும் நிறுவனம் நேரடியாக ப்ரீமியம் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கும் வாடிக்கையாளர் இன்சூரன்ஸ் திட்டத்தைப் பெறுவர்.

கடனுக்கான ஈஎம்ஐ

கடனுக்கான ஈஎம்ஐ

இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர் (மக்கள்) ப்ரீமியம் தொகைக்குப் பதிலாகக் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்த வேண்டும். இதேபோல் இத்தகைய திட்டத்திற்கான கடன் எவ்வளவு என்பது இதுவரை தெரியவில்லை என்பதோடு இன்சூரன்ஸ் வாடிக்கையாளர் கடனுக்கான வட்டியும் செலுத்த வேண்டும் என்பது சுமை தான்.

pro-rata அடிப்படை

pro-rata அடிப்படை

மேலும் இன்சூரன்ஸ் திட்டத்தைக் கடன் திட்டம் மூலம் வாங்கி, பாதியிலேயே நிறுத்திக் கொண்டால் இன்சூரன்ஸ் நிறுவனம் pro-rata அடிப்படையில் பணத்தைக் கடன் கொடுத்த நிறுவனத்திற்கு அளித்துவிட்டு மீதமுள்ள தொகையை மட்டுமே வாடிக்கையாளர் பெற முடியும் என மற்றொரு இன்சூரன்ஸ் துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க.. மறக்காம கமெண்ட் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Insurance regulator looks at premium financing proposal

Insurance regulator looks at premium financing proposal 10 பைசா செலவு இல்லாமல் இன்சூரன்ஸ் வாங்கலாம்.. புதிய திட்டம்.. பயன்பாட்டுக்கு வருமா..?!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.