Vijay 66: கதையைப் பிரதிபலிக்கக்கூடிய பெயர்! விஜய் 66 படத்தின் டைட்டில் இதுதானா?

நாளை மாலை 6 மணிக்கு `விஜய் 66′ படத்தின் அப்டேட் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக நாளை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். இதுகுறித்து விசாரித்தோம்.

இயக்குநருடன் விஜய்

நாகார்ஜூனா, கார்த்தி நடித்த ‘தோழா’ படத்தின் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவரது 66வது படமான ‘விஜய் 66’ படத்தின் சென்னை, ஹைதராபாத்தை தொடர்ந்து மீண்டும் சென்னையில் நடந்து வருகிறது. விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு என பலரும் இதில் நடித்து வருகின்றனர். சென்னை கோகுலம் ஸ்டூடியோ, ஓ.எம்.ஆரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையே படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜய்யின் லுக் வெளியானதைத் தொடர்ந்து ஷூட்டிங் அரங்குகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக முக்கியமான காட்சி ஒன்றைப் படமாக்க இப்போது தனியார் இடம் ஒன்றிலும் செட் அமைத்து வருகின்றனர். ஃபைட் சீக்குவென்ஸ்கள் பரபரப்பாகப் படமாகிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

விஜய் 66

தமன் இசையில் ஒரு பாடலை பாடவிருக்கிறார் விஜய். நாளை வெளியாகவிருக்கும் படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என்று விசாரித்ததில், படத்திற்கு ‘வாரிசு’ என்ற டைட்டில் வைக்க உள்ளதாகச் சொல்கிறார்கள். இது தவிர, மொத்தம் 15 டைட்டில்கள் முடிவு செய்து வைத்துள்ளனர்.

‘எல்லாமே கதையைப் பிரதிபலிக்கக்கூடிய டைட்டில்கள்தான். அதனால் அவை சாஃப்ட்டான டைட்டில்களாகவே இருக்கும்’ என்றும் சொல்கிறார்கள். அதேபோல, நாளை மாலை 6.01க்கு முதல் அப்டேட் வெளியானவுடன், நள்ளிரவு 12.01-க்கு, அதாவது விஜய்யின் பிறந்தநாளுக்கு மற்றுமொரு அப்டேட் வெளியாகும் என்று தெரிவிக்கிறார்கள். அது விஜய் வேறொரு லுக்கில் இருக்கும் படத்தின் செகண்ட் லுக் போஸ்டராக இருக்கலாம்.

இன்னொரு தகவல், விஜய் – லோகேஷ் கனகராஜ் படம் ‘விஜய் 67’ பேச்சுக்கள் உறுதியாகிவிட்டதே தவிர, இந்தப் பிறந்த நாளில் லோகேஷின் பட அப்டேட்கள் எதுவும் வெளிவராது. எனவே ‘விஜய் 66’ அப்டேட் மட்டும்தான் ஹாட் டாபிக்காக இருக்கப்போகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.