Agneepath: அக்னிபாத் திட்டம் குறித்து சர்ச்சை பதிவுகள் – வாட்ஸ்அப் குழுக்களை முடக்கும் ஒன்றிய அரசு!

Agneepath Scheme Issue: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் போது பல ரயில்கள் தீயிக்கு இரையாக்கப்பட்டது. பல இடங்களில் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளன.

இதனால் நாட்டில் கோடிக்கிலான ரூபாய் மதிப்புள்ள பொதுச் சொத்துக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்ட சுமார் 35 வாட்ஸ்அப் குழுக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்திற்கு எதிராக வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து நாடு முழுவதும் சர்ச்சை கருத்துகள் பரப்பப்பட்டு வருகிறது. இதனையடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, நரேந்திர மோடி தலைமையிலான மோடி அரசு, 35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு தடை விதித்துள்ளது.

Internet Explorer: இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்காக கல்லறை… பொறிக்கப்பட்ட வாசகத்தால் ஷாக் ஆன மைக்ரோசாப்ட்!

பத்து பேர் கைது

வன்முறைக்கு காரணம் என்று சொல்லப்படும் வாட்ஸ்அப் குழுக்கள் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறி 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டங்களை உடனடியாகக் கைவிடுமாறு ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. போராட்டம் நடத்துபவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.

Nothing Phone 1: வெளியீட்டுக்கு முன் விற்பனைக்கு வரும் 100 நத்திங் போன் 1 லிமிட்டட் எடிஷன் போன்கள்!

அக்னிபாத் திட்டத்தில் அக்னி வீரர்கள் பணி நியமனம் குறித்து முப்படையினரும் விளக்கம் அளித்துள்ளனர். இந்த தகவல் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. போலியான மற்றும் தவறான தகவல்கள் விரைவில் நிறுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

அக்னிபாத் திட்டம் என்றால் என்ன

ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் தற்காலிகமாக 4 ஆண்டுகள் பணியாற்றும் வகையில் இளைஞர்களைச் சேர்ப்பதற்காக அக்னிபாத் திட்டம் தொடங்கப்படுகிறது.

ஏராளமான இளைஞர்கள் ராணுவத்தில் சேரும் வகையில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள் ‘அக்னி வீரர்கள்’ என்றழைக்கப்படுவர்.

Dangerous Apps: இந்த ஆப்கள் வேண்டாம்; மிகவும் ஆபத்தானது… உடனடியாக அழித்து விடுங்கள்!

அவர்கள் பாதுகாப்புப் படையில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிவார்கள். இவர்களில் தேவைக்கு ஏற்ப, 25 விழுக்காட்டினரை மட்டும் நிரந்தரப் பணியில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னிபாத் வயது வரம்பு

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 46,000 பேர் பணியில் சேர்க்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான வயது வரம்பு 17.5 வயது முதல் 21 வயதாகும்.

இரு ஆண்டுகளாக கரோனா காரணமாக ராணுவத்துக்கு ஆளெடுக்காததால், இந்த ஆண்டு மட்டும் 23 வயது வரையிலானோர் தெரிவு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் உரிய மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும்.

Online Fraud: ஆன்லைன் மோசடி… புகார் செய்ய இந்த 6 இலக்க எண் உதவும்!

ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கை

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பரவி வரும் வதந்திகள் குறித்து இந்திய ராணுவம் அறிக்கை அளித்துள்ளது.

துருப்புக்களின் ரெஜிமென்ட் அமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த ஏற்பாடு முன்பு போலவே தொடரும். அக்னிபாத் திட்டம் குறித்து தற்போதைய மற்றும் முன்னாள் ராணுவ அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Upcoming Smartphones 2022: மலிவு முதல் பட்ஜெட் 5ஜி போன்கள் இந்த வாரம் ரிலீஸ்!

இருப்பினும், சில வாட்ஸ்அப் குழுக்கள் அக்னிபாத் திட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, அத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.